சபை அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசம் பற்றிய சுருக்கமானதொரு அறிமுகம்.
தென்னிலங்கையின் முகத்திடல் என பெயர் பெற்றுள்ள பென்தோட்டை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசம்,இலங்கையின் மேல் மாகாணத்தின் எல்லையில் தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தின் பெந்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது.
இப்பிரதேச சபை எல்லைகுட்பட்ட பிரதேசம் கடலோரமாக வடக்கு தெற்காக 9.5 கிலோ மீட்டர்களுக்கும் நாட்டின் உட்புறமாக 12 கிலோமீட்டரிற்கும் விரவியுள்ளதுடன் அதன் பரப்பளவு காலி மாவட்டத்தின் நிலப்பரப்பின் 4.5 ℅ வீதமான 7379 ஹெக்டெயாராகும்.
பெந்தோட்ட பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசமானது வடக்கே மற்றும் வடகிழக்கே களுத்துறை மாவட்டத்தையும், பெந்தர கங்கையையும், கிழக்கே எல்பிட்டிய பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தையும்,
தெற்கே கரந்தெனிய மற்றும் பலபிட்டிய பிரதேச சபைக்குரிய பிரதேசங்களையும் மேற்கே இந்து சமுத்திரத்தையும் எல்லையாக கொண்டுள்ளது
முற்காலத்தில் பெம் கங்கையைக் கடப்பதற்காக இருந்த படகுத்துறையை அரக்கன் ஒருவன் அபகரித்ததால் அப்படகுத் துறை பயங்கரமான படகுத்துறை என்று பொருள்படும் விதமாக சிங்களத்தில் “பீம தீர்த்த” அல்லது ” பயானக்க தொட்ட” என்று அழைக்கப்பட்டு காலக்கிரமத்தில் “பெம் தொட்ட” என்றும் பின் “பெந்தொட்ட” என்றும் மருவியதாக சொல்லப் படுகிறது.
“பென் கங்கையின் மறுகரை” என்னும் சொல்லுக்கான சிங்கள வசனமான “பென் கங்கின் எத்தெர” எனும் வசனத்திலிருந்தே” பெந்தர” என்பது உருவானதாகவும் கூறப்படுகிறது.
135 சிறு கிராமங்களைக் கொண்டதாக காணப்பட்ட இப் பிரதேசம் 1997இல் கிராம சேவர் பிரிவுகள் 16 கொண்டதாக மாற்றம் பெற்று நிகழ்காலத்தில் நிர்வாக ரீதியான எளிதாக்கலுக்காக 51 கிராம சேவகர் பிரிவுகளாக பிரித்து வேறுபடுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று 2018 மாகாண சபை தேர்தல்கள் தேர்தல் பிரிவு வாரியாக நடத்தப்பட்டது. அதற்கமைய பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் 13 தேர்தல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
இப்பிரதேசத்தின் மக்கள் தொகை நகர்ப்புறம்,அரை நகர்ப்புறம்,கிராமப்புறம் ஆகியவற்றை உள்ளடக்கி அமைந்துள்ளதுடன் 2018 கணக்கெடுப்பு தகவல்களின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை 54286 ஆகும்.அதில் பெண்கள் 27884 உம்,ஆண்கள் 26402 உம் அடங்குவர்.
பெந்தொட்ட பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தை பொருளாதார ரீதியாக நோக்கும் போது சுற்றுலாத் தலமான இப்பிரதேசத்தின் பொருளாதாரம் சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்களைச் அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது.இது தவிர நெற்செய்கை,தேயிலை,தெங்கு,ரப்பர் பயிர்ச்செய்கைகளுடன் பிரதான வருமானமாக கறுவாப் பயிர்ச்செய்கையும் காணப்படுகிறது.
குடிசைக் கைத்தொழில்களாக தும்புக் கயிறு உற்பத்தி,பனை சார்ந்த தயாரிப்புகள்,கிரல காய் மூடி தயாரிப்பு, மரச்சிற்பங்கள் மற்றும் தென்னங் கள்ளிறக்கல்,வினாகிரி தயாரிப்பு ஆகியன காணப்படுகின்றன.
வரலாற்று ரீதியாக நோக்கும் போதும் பெந்தோட்டை பிரதேசம் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றது. பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் தென்னாட்டின் தெற்கு எல்லையாகக் காணப்பட்ட இப்பிரதேசத்தில் அடிக்கடி யுத்தங்கள் இடம் பெற்றதுடன் மயில் விடு தூது, கிளி விடு தூது, புறா விடு தூது ஆகிய இலக்கியங்களிலும் பெந்தோட்டை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற புராண ராஜ மகா விகாரைகள் ஐந்து காணப்படும் இப்பிரதேசத்தில் கலப்பாத்த ராஜமகா விகாரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க காசியப்ப தலதா பெரஹெரா இன்று வரை வருடாந்தம் நடைபெற்று பெந்தோட்ட நகரை ஒளியூட்டும் வண்ணம் வீதிவலம் வருகிறது.
பெந்தோட்டை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசம் கலைத் துறையின் கலாசாலையாகக் காணப்படுவதுடன் கீழ்நாட்டு பாரம்பரிய நாடகங்களான கோலம் நாடகங்களுக்கு மிகப் பிரபலமானதாகும். அவ்வாறே, சாந்தி கர்மங்கள்,தஹ அட்ட சன்னிய, பில்லி சூனியம் ஆகியன இன்றும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றமைக்கு இங்கு தோன்றிய பிரபல கலைஞர்கள் இன்றும் இக்கலைகளை அரணாகப் பாதுகாத்து வாழ்ந்து வருகின்றமையே காரணமாகும்.
இன்று பொருளாதார,சமூக,கலாச்சார ரீதியாக அபிவிருத்தி அடைந்துள்ள பெந்தோட்டை எதிர்காலத்தில் தென்னிலங்கைக்கு ஒளியூட்டும் ஒளிவிளக்காய் அமையும் என்பது திண்ணம்.
பெந்தோட்டை பிரதேச சபை அதிகாரப்பிரதேசத்திற்குட்பட்ட தேர்தல் பிரிவுகளின் பெயர் விபரம்.
தேர்தல் பிரிவு இலக்கம். தேர்தல் பிரிவின் பெயர்
1. யாத்ராமுல்ல
2. போதிமலுவ
3. தோபே
4. ஹபுருகல
5. எலகாக்க
6. மஹகொட
7. கோனகலபுர
8. அதுருவெல்லை
9. கயிக்காவலை
10. வரக்காமுல்ல
11. மிரிஸ்வத்த
12. ரந்தொட்டுவில
13. மஹ ஊரகஹ